இந்த வார விசேஷங்கள்: 21-1-2020 முதல் 27-1-2020 வரை


இந்த வார விசேஷங்கள்:  21-1-2020 முதல் 27-1-2020 வரை
x
தினத்தந்தி 21 Jan 2020 4:08 PM GMT (Updated: 21 Jan 2020 4:08 PM GMT)

21-ந் தேதி (செவ்வாய்) * வைஷ்ணவ ஏகாதசி. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

* மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்.

* மதுரை செல்லத்தம்மன் விருட்ச சேவை.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.

* அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வியாழன்)

* மாத சிவராத்திரி.

* திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் காட்சியருளல், இரவு பட்டாபிஷேகம், புஷ்ப சப்பரத்தில் வீதி உலா.

* சூரியநயினார் கோவிலில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வெள்ளி)

* தை அமாவாசை.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்சதீபம், ரிஷப வாகனத்தில் பவனி.

* மதுரை செல்லத்தம்மன் ஆலயத்தில் ரத ஊர்வலம்.

* மதுரை மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம் சாற்றும் முறை.

* ராமேஸ்வரம் ராமபிரான் வெள்ளி ரத உலா.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (சனி)

* சிரவண விரதம்.

* திருநாங்கூரில் 11 கருட சேவை.

* மதுரை செல்லத்தம்மன் இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.

* சூரியநயினார் கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (ஞாயிறு)

* ஸ்ரீவாசவி அக்னி பிரவேசம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் சுவாமி பவனி.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* அப்பூதி நாயனார் குருபூஜை.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.

* சங்கரன்கோவில் கோமதிஅம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

Next Story