ஆன்மிகம்

முருகனை வணங்கும் சண்டிகேஸ்வரர் + "||" + Chandikeswara who worships Lord Murugan

முருகனை வணங்கும் சண்டிகேஸ்வரர்

முருகனை வணங்கும் சண்டிகேஸ்வரர்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூா் அருகே உள்ளது ஆதிக்கடவூர் திருமயானம் என்ற கிராமம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஒரே சன்னிதிக்குள் இரண்டு சண்டிகேஸ்வரா்களை தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை, ‘சிங்காரவேலர்’ என்பார்கள். 

சிவ பக்தரான சண்டிகேஸ்வரா், சிவன் கோவிலில் கருவறை சுற்றில் தியானத்தில் இருப்பாா். ஆனால் இந்த தலத்தில் உள்ள சண்டிகேஸ்வரா், முருகப்பெருமானை பிரார்த்தித்தபடி இருப்பதாக ஐதீகம். எனவே அவருக்கு ‘குக சண்டிகேஸ்வரா்’ என்று பெயர்.