இந்த வார விசேஷங்கள்; 18-2-2020 முதல் 24-2-2020 வரை

18-ந் தேதி (செவ்வாய்) கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா. காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் யானை வாகனத்தில் பவனி.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
சமநோக்கு நாள்.
19-ந் தேதி (புதன்)
சர்வ ஏகாதசி.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் தங்க விருட்ச சேவை.
திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.
20-ந் தேதி (வியாழன்)
முகூர்த்த நாள்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் முத்தங்கி சேவை, இரவு தங்கப் பல்லக்கில் பவனி.
திருகோகர்ணம் சிவபெருமான், சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (வெள்ளி)
மகா சிவராத்திரி
முகூர்த்த நாள்.
பிரதோஷம்
சிரவண விரதம்
மூங்கிலனை காமாட்சியம்மன் பெருந்திருவிழா.
திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுகா அர்ச்சனை.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் மின் விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் விருட்ச சேவை.
மேல்நோக்கு நாள்.
22-ந் தேதி (சனி)
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ரத உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் உலா.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திரு கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் ரத உற்சவம்.
மேல்நோக்கு நாள்.
23-ந் தேதி (ஞாயிறு)
அமாவாசை.
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்ச தீபம்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி- அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்சத்திலும் பவனி.
திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருகல்யாண உற்சவம்.
மேல்நோக்கு நாள்.
24-ந் தேதி (திங்கள்)
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா.
மேல்நோக்கு நாள்.
Related Tags :
Next Story