இந்த வார விசேஷங்கள்; 25-2-2020 முதல் 2-3-2020 வரை


இந்த வார விசேஷங்கள்; 25-2-2020 முதல் 2-3-2020 வரை
x
தினத்தந்தி 25 Feb 2020 11:13 AM GMT (Updated: 25 Feb 2020 11:13 AM GMT)

25-ந் தேதி (செவ்வாய் )* கோயம்புத்தூர் கோணியம்மன், நத்தம் மாரியம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம். * காளஹஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் மலை வலம் வருதல். * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* சாம்பல் புதன்.

* திருநெல்வேலி டவுண் மேலரத வீதி பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.

* நத்தம் மாரியம்மன் பவனி வருதல்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (வியாழன்)

* சதுர்த்தி விரதம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம்.

* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (வெள்ளி)

* மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக்கம், சூரிய பிரபையில் சுவாமி பவனி.

* நத்தம் மாரியம்மன் கோவிலில் பால் காவடி உற்சவம், இரவு மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் அம்பாள் வீதி உலா.

* திருப்போரூர், வள்ளிமலை ஆகிய தலங்களில் முருகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.

* சமநோக்கு நாள்.

29-ந் தேதி (சனி)

* சஷ்டி விரதம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் சுவாமி பவனி.

* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.

* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடய வாகனத்திலும், அம்பாள் சிறிய சப்பரத்திலும் புறப்பாடு.

* பெருவயல் முருகப்பெருமான் கிடா வாகனத்தில் பவனி.

* மதுரை இம்மையில் நன்மை தருவார் திருவீதி உலா.

* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (ஞாயிறு)

* கார்த்திகை விரதம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், மரத் தோளுக்கினியானில் பவனி.

* காங்கேயநல்லூர் முருகப் பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு.

* திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் உபதேசித்து அருளிய லீலை.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் உற்சவம் தொடக்கம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பூங்கோவில் சப்பரத்திலும், அம்பாள் கேடயத்திலும் பவனி. இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்தில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (திங்கள்)

* காங்கேயநல்லூர் முருகப் பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

* காரமடை அரங்கநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

* நத்தம் மாரியம்மன் பவனி வருதல்.

* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

Next Story