இந்த வார விசேஷங்கள்: 14-ந் தேதி காரடையான் நோன்பு


இந்த வார விசேஷங்கள்: 14-ந் தேதி காரடையான் நோன்பு
x
தினத்தந்தி 9 March 2020 11:00 PM GMT (Updated: 9 March 2020 11:52 AM GMT)

10-3-2020 முதல் 16-3-2020 வரை

10-ந் தேதி (செவ்வாய்)

திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம் ஆரம்பம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.

காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.

திருக்கோஷ்டியூர் பெருமாள் தீர்த்தவாரி, தங்க தோளுக்கினியானில் பவனி.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)


காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

எரிபத்த நாயனார் குருபூஜை.

நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி வருதல்.

காரமடை அரங்கநாதர் திருவீதி உலா.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

முகூர்த்த நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சுவாமி- தாயார் இந்திர விமானத்தில் பவனி.

காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் ஆலய உற்சவம் தொடக்கம்.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவ சேவை.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சமநோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூரியப் பிரபையிலும் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா, இரவு சுவாமி- அம்பாள் இருவரும் கமலப் பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

ராமேஸ்வரம் பா்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

காரடையான் நோன்பு.

திருக்குறுங்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் லட்ச தீபக் காட்சி.

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் புறப்பாடு.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம், கல்யாண அலங்கார திருக்கோலம்.

திருவரங்கம் நம்பெருமாள் திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அம்ச வாகனத்திலும் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரத்தில் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்தில் சுவாமியும், வெள்ளி கமல வாகனத்தில் தாயாரும் பவனி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ராஜாங்க அம்ச வாகனத்தில் வீதி உலா.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி வருதல்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

சமநோக்கு நாள்.

Next Story