சன்னிதியை மறைக்காதீர்கள்
சிவன் கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம விதிப்படி, கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வழிபடக் கூடாது.
சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை காற்று கிடைப்பதாக நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னிதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.
Related Tags :
Next Story