ஆன்மிகம்

பசுவின் உடலில் குடியிருக்கும் தெய்வங்கள் + "||" + The deities who dwell in the body of the cow

பசுவின் உடலில் குடியிருக்கும் தெய்வங்கள்

பசுவின் உடலில் குடியிருக்கும் தெய்வங்கள்
பசு மாட்டை தெய்வமாக வணங்கும் வழக்கம், இந்து சமயத்தில் இருக்கிறது. பசுவை ‘கோமாதா’ என்றும் அழைப்பார்கள். இந்த கோமாதாவின் உடலில் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வீற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே தினமும் பசுவை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் வந்து சேரும். எந்த தெய்வங்கள், பசுவின் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

தலை - சிவபெருமான்

நெற்றி - சிவசக்தி

வலது கொம்பு - கங்கை

இடது கொம்பு - யமுனை

கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய

புண்ணிய நதிகள்

கொம்பின் அடியில் - திருமால்

மூக்கின் நுனி - முருகன்

மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்

இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்

இரு கண்கள் - சூரியன், சந்திரன்

வாய் - சர்ப்ப அசுரர்கள்

பற்கள் - வாயுதேவர்

நாக்கு - வருணதேவர்

நெஞ்சு - கலைமகள்

கழுத்து - இந்திரன்

மணித்தலம் - எமன்

உதடு - உதய, அஸ்தமன,

சந்தி தேவதைகள்

கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்

மார்பு - சாத்திய தேவர்கள்

வயிறு - பூமிதேவி

கால்கள் - அக்னி தேவன்

முழந்தாள் - மருத்து தேவர்

குளம்பு - தேவர்கள்

குளம்பின் நுனி - நாகர்கள்

குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்

குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்

முதுகு - ருத்திரர்

யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)

குதம் - லட்சுமி

முன் கால் - பிரம்மா

பின் கால் - ருத்திர பரிவாரங்கள்

பால் மடி - ஏழு கடல்கள்

சந்திகள் - அஷ்ட வசுக்கள்

அரைப் பரப்பில் - பித்ரு தேவதை

வால் முடி - ஆத்திகன்

உடல்முடி - மகா முனிவர்கள்

எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்

சடதாக்கினி - காருக பத்தியம்

இதயம் - ஆகவணியம்

முகம் - தட்சரைக் கினியம்