மங்கலம் நல்கும் மணக்குள விநாயகர்

விநாயகரின் சிறப்புமிக்க ஆலயங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகருக்கு தனி இடம் உண்டு. இந்தியாவிலேயே தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்குதான் இருக்கிறது. இந்த ஆலயத்தில் காணப்படும் மேலும் பல சிறப்பு களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
8 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல மூலவா் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் இடதுபக்கம் மூல வருக்கு அருகிலேயே ஒரு சிறிய குழி காணப்படும். இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் இதில் எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும்.
புதுச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த 10 ஆண்டுகளில், இந்த விநாயகப் பெருமானைப் போன்றி 40 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை `நான்மணிமாலை' என்று வழங்கப்படுகிறது.
பிரம்மச்சாரியாகவே கருதப்படும் விநாயகருக்கு, இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது மற்றொரு சிறப்பாகும். ஏனெனில் இங்கு விநாயகா், சித்தி- புத்தி என்ற இரண்டு மனைவி யருடன் காட்சியளிக்கிறார்.
டச்சுக்காரா்கள், போர்ச்சுகீசியா்கள், டேனீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரா்கள், ஆங்கிலேயா்கள் என 5 வெளிநாட்டவா்களின் ஆட்சிகளிலும் சிறப்புற்று விளங்கியவா், இந்த மணக்குள விநாயகா்.
மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும், சுவாமி வாகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய் கிறார்கள்.
கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருளாசி வழங்கும் இந்த விநாயகா், இடம்புரி விநாயகராக அருள்கிறார்.
இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உப வாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தி யடைந்து திருமணம் நடைபெறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடி. இந்த ஆலயத்தில் காணாபத்திய ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழ வகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிேஷகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணாபிஷேகம், 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.
வருடத்தின் மிக முக்கிய விசேஷ நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங் களிலும் கோவிலில் மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாட்டுக்காக இங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏராளம்.
Related Tags :
Next Story