போர்க்கோல யோகினி
ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார்.
இந்துமத வழிபாடுகளில் முக்கியமானது, சக்தி எனப்படும் அம்பாளுக்குரிய ‘சாக்தம்’ வழிபாடு. அந்த சக்தி வழிபாட்டில், பரிவார தேவதைகளாக விளங்கும் யோகினிகள் மிகவும் முக்கியமானவர்கள். அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து, 8 யோகினிகளை தோற்றுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
அந்த 8 யோகினிகளும், தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். இவர்கள் அனைவரும் 64 கலைகளை குறிப்பிடுவதாகவும் சொல்வதுண்டு.
அதில் ஒரு வித்தியாசமான யோகினி தேவியின் வடிவத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார். கைகளில் வாள், கேடயம் தாங்கியிருக்கிறார்.
இரண்டு விரல்களால் ‘விசில்’ அடிக்கும் தொனியில் காணப்படுகிறார். போர் தொடங்குவதற்கு முன்பாக எழுப்பப்படும் ஒலியை, இப்படி விரல்கள் மூலம் இந்த யோகினி எழுப்புவதாக கருதப்படுகிறது.
உத்தரபிரதேசம் அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்த, 10-11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை, தற்போது அமெரிக்காவின் சான் அன்டனியோ கலை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story