அரங்கநாதரின் ‘7’ அதிசயங்கள்


அரங்கநாதரின் ‘7’ அதிசயங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 12:42 PM GMT (Updated: 25 Nov 2021 12:42 PM GMT)

பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 வைணத் திருத்தலங் களுள் முதல் திருத்தலமாக, திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங் களைப் பற்றி இங்கே பார்ப்போம்..

‘பெரிய’ பெருமை

* பெரிய கோவில்

* பெரிய பெருமாள்

* பெரிய பிராட்டியார்

* பெரிய கருடன்

* பெரிய வசரம்

(நைவேத்தியம்)

* பெரிய திருமதில்

* பெரிய கோபுரம்

நாச்சியார்கள்

* ஸ்ரீதேவி

* பூதேவி

* துலுக்க நாச்சியார்

* சேரகுலவல்லி நாச்சியார்

* கமலவல்லி நாச்சியார்

* கோதை நாச்சியார்

* ரெங்கநாச்சியார்

பிரகாரங்கள்

* பூலோகம் - மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று

* புவர்லோகம் - திரிவிக்ரம சோழன் திருச்சுற்று

* சுவர்லோகம் - கிளிச்சோழன் திருச்சுற்று

* மஹர்லோகம் - திருமங்கை மன்னன் திருச்சுற்று

* ஜநோலோகம் - குலசேகரன் திருச்சுற்று

* தபோலோகம் - ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று

* சத்யலோகம் - தர்மவர்ம சோழன் திருச்சுற்று

ஆழ்வார்கள் சன்னிதி

திருமாலைப் பற்றி பாடல்களைப் பாடி அருளியுள்ள பன்னிரண்டு ஆழ்வார்களும், திருவரங்கம் ஆலயத்தில் 7 சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

* பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

* நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்

* குலசேகர ஆழ்வார் * திருப்பாணாழ்வார்

* தொண்டரடிப்பொடி ஆழ்வார் * திருமழிசை ஆழ்வார்

* பெரியாழ்வார், ஆண்டாள்

தங்க குதிரை வாகனம்

திருவரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆண்டுக்கு 7 முறை மட்டுமே, தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்..

* விருப்பன் திருநாள் * வசந்த உற்சவம்

* விஜயதசமி * வேடுபறி

* பூபதி திருநாள் * பாரிவேட்டை

* ஆதி பிரம்மோற்சவம்

தாயார் உற்சவம்

* கோடை உற்சவம்

* வசந்த உற்சவம்

* ஜேஷ்டாபிஷேகம்

* நவராத்திரி

* ஊஞ்சல் உற்சவம்

* அத்யயன உற்சவம்

* பங்குனி உத்திரம்

தென்திசை கோபுரங்கள்

* நாழிகாட்டான் கோபுரம்

* ஆர்யபடால் கோபுரம்

* கார்த்திகை கோபுரம்

* ரங்கா ரங்கா கோபுரம்

* தெற்கு கட்டை கோபுரம்

* தெற்கு கட்டை கோபுரம்-2

* தெற்கு ராஜகோபுரம்


Next Story