பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு


பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
x

பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினாா்கள்.

ஈரோடு

பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் அதிகாலையில் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்து வழிபாடு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.


Related Tags :
Next Story