மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில்  வெண்ணெய் தாழி உற்சவம்
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்

திருவாரூர்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வெண்ணெய் தாழி உற்சவம்

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் புகழ்பெற்ற வைணவ திருக்கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பெருமாளுக்கு வருடம் முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலும் ஒன்றாகும். பங்குனி மாதம் நடைபெறும் ஒரு மாத திருவிழா இந்த கோவிலின் முக்கியமான திருவிழாவாகும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. விழாவில் தங்க சூரிய பிரபை 20-ந்தேதியும், தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வெண்ணெய்தாழி உற்சவம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.

தேரோட்டம்

இன்று காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வெண்ணெய் குடத்துடன் காட்சி தரும் ராஜகோபாலன் மீது பக்தர்கள் வெண்ணை வீசி வழிபடுவது இன்றைய விழாவின் சிறப்பாகும். இன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜஅலங்காரத்தில் காட்சி தருகிறார். நாளை(திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி திருவிழாவின் நிறைவாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்ப திருவிழா ஏப்ரல் 9-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


Next Story