அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம்


அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம்
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் இங்கு ஆயுள் ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் திரைப்பட நடிகர் ராதாரவி குடும்பத்துடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். பின்னர் கோபூஜை, கஜபூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, காலசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிா்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story