சனி பகவானை எதிர்த்த தசரதன்


சனி பகவானை எதிர்த்த தசரதன்
x

தசரதன் தன்னுடைய மக்களுக்காக யுத்தத்திற்கு வரும்படி சனி பகவானுக்கு அழைப்பு விடுத்தார்.

ராமரின் தந்தையான தசரதன், அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு சங்கடமான நிலை உலகிற்கு ஏற்பட இருப்பதை அவர் அறிந்தார். இதுபற்றி அப்போது அரசவை குருவாக இருந்த வசிஷ்டரிடம், தசரதன் கேட்டார். அதற்கு வசிஷ்டர், "சனி பகவான், ரோகிணி நட்சத்திரத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் நாட்டில் மழை பெய்யாது. உயிர்கள் அனைத்தும் பசி, பட்டினியால் வாடும்" என்று கூறினார்.

தன் மக்களுக்காக சனி பகவானுடன் யுத்தம் செய்ய முடிவு செய்தார், தசரதன். அதன்படி தன்னுடைய தேரில் ஏறி, சனி பகவான் இருப்பிடம் சென்றார். யுத்தத்திற்கு வரும்படி சனி பகவானுக்கு அழைப்பு விடுத்தார். தசரதன் இவ்வாறு செய்வது சனி பகவானுக்கு அறியாமையாகத் தெரிந்தது. இருந்தாலும், தசரதன் தன்னுடைய மக்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பது கண்டு சனி பகவான் மகிழ்ந்தார். உடனே தசரதனிடம், "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.

தசரதன், "என் நாட்டு மக்கள் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கக்கூடாது. அதற்கு நீங்கள் ரோகிணி நட்சத்திரத்தை உடைப்பதை நிறுத்த வேண்டும்" என்று வேண்டினார். சனி பகவானும் "அப்படியே ஆகட்டும்" என்று கூறினார்.


Next Story