வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ: அதிர்ந்த பெண் ஊழியர்கள்...அதிகாரி சஸ்பெண்ட்


வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ: அதிர்ந்த பெண் ஊழியர்கள்...அதிகாரி சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 12 Jun 2022 9:33 AM GMT (Updated: 12 Jun 2022 9:39 AM GMT)

ள் அதிர்ச்சி அடைந்தனர். 24 மணி நேரம் ஆகியும் கண்டும் காணாத அதிகாரியை சஸ்பெண் செய்யப்பட்டார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா பகுதியில் கலால் துறை உதவி அதிகாரியாக இருப்பவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வாட்ஸ் ஆப் குழு வைத்துள்ளனர்.

இதில், தங்களுக்கான தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அஹிர்வார் இந்த குழுவில் ஆபாச வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த வீடியோ பகிர்ந்து 24 மணி நேரம் ஆகியும் அவர் அதை நீக்கம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் அஹிர்காரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த சம்பவத்திற்கு அஹிர்வார் மறுப்பு தெரிவித்துள்ளார். "நான் ஓய்வு அறைக்கு சென்று இருந்த போது யாரோ ஒருவர் எனது தொலைபேசியை எடுத்து அதிலிருந்து வீடியோவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துள்ளார்" என அஹிர்வார் தெரிவித்துள்ளார்.


Next Story