காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட நந்தி: பக்தர்கள் தரிசனம்


காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட நந்தி: பக்தர்கள் தரிசனம்
x

காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சித்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சித்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. இதில் மூலவர் சித்தீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது இதை தொடர்ந்து புதியதாக செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட நந்தி வாகனத்தில் பிரதோஷ பகவான் எழுந்தருளி கோவில் வளாகத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆலய பரம்பரை தர்மகர்த்தா பாலசுப்பிரமணிய குருக்கள் பக்தர்கள் ஒத்துழைப்புடன் இந்த புதிய நந்தி வாகனம் தயார் செய்யப்பட்டது.


Next Story