வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர்.
வனபத்ரகாளியம்மன் கோவில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றில் கரையோரத்தில் வன பத்ர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு 29-ம் ஆண்டு ஆடிக்குண் டம் திருவிழா நிகழ்ச்சிகள் வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி வரை நடக்கிறது.
வருகிற 26-ந் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற் றது. 36 அடி நீளம், 2 ½ அடி அகலம் கொண்ட குண்டத்தின் இரு புறமும் மற்றும் முன்புறமும் பல வண்ண மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. இது காண்போர் மனதை கவரும் வகையில் இருந்தது.
குண்டம் கண் திறப்பு
காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் கற்பூர தீபமேற்றி குண்டத்தில் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி, கண்கா ணிப்பாளர் மல்லிகா, கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள், குண்டத்தின் மீது மலர்களை தூவி அம்மனை மனதில் நினைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்
பூச்சாட்டு
வருகிற 22 -ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 23-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி, 24-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல், 26 -ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல், 27 -ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம் மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடல், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1 -ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி காலை 8 மணிக்கு மறுபூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.






