குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
x

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஈரோடு

அந்தியூரில் பிரசித்தி பெற்ற செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. குருப்பெயர்ச்சியையொட்டி இந்த கோவிலில் நேற்று காலை 6 மணி அளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அந்தியூர் மற்றும் அதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

இதேபோல் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைெபற்றது.

இதையொட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் 108 சங்காபிஷேகம், கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் கரையில் உள்ள ராகு, கேது தலம் என அழைக்கப்படும் நாகேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.


Next Story