பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: 23-ந் தேதி நடக்கிறது


பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: 23-ந் தேதி நடக்கிறது
x

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

சென்னை,

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதியுடன், 36 அடி உயரத்தில் வானளாவிய விஸ்வரூப மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

இங்கு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி-சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனமும் மாலை 5 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 23-ந் தேதி காலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நடை திறக்கப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த மகாதேசிகர் ஆகியோர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டு தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், உபதலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story