ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்


ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
x

இறைவனை அடைவதற்கும் இறையருளைப் பெறுவதற்கும், இறைவனை நாடித்தான் ஆக வேண்டும்.

கேள்வி:- வீட்டில் ஏற்றும் விளக்கில் தேங்காய் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றலாமா? (எஸ்.வள்ளுவன், நாகர்கோவில்)

பதில்:- வீட்டில் ஏற்றும் விளக்கில் தேங்காய் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றலாம். நெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய் விட்டும் விளக்கேற்றலாம். எந்த எண்ணெய் ஊற்றுகிறோமோ, அந்த எண்ணெய் மட்டுமே விளக்கில் இருக்க வேண்டும். ஓர் எண்ணெயுடன் மற்றோர் எண்ணெயை சேர்த்து (உதாரணமாக நல்லெண்ணெயும் நெய்யும் கலந்து) தீபம் ஏற்றக்கூடாது.

கேள்வி:- எனக்கு வேண்டியதை நான் தேடிப் பெறுவேன். பிரார்த்தனை என்ற பெயரில், இறைவனைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் தேவைகள் பற்றி என்னைப் படைத்த இறைவனுக்குத் தெரியும் என்பது என்ன மாதிரியான மனநிலை?(எஸ்.பார்த்திபன், ஓட்டேரி, சென்னை)

பதில்:- மனம் பக்குவப்படத் தொடங்குகிறது என்பதான மனநிலை இது. 'வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என மாணிக்கவாசகரும்; 'மனதில் உன்னி விழியால் புனல் சிந்தி, விம்மி அழு நன்மை வேண்டும் என்றே' -எனப் பட்டினத்தாரும் சொன்னபடி, இறைவனை அடைவதற்கும் இறையருளைப் பெறுவதற்கும், இறைவனை நாடித்தான் ஆக வேண்டும்.

கேள்வி:- நல்லவர்கள் இந்த மண்ணில் அதிக நாட்கள் வாழ்வது இல்லை. அப்படியே வாழ்ந்தாலும் துன்பத்தில் தவிக்கிறார்கள். ஆனால் கெடுதல் எண்ணம் உள்ளவர்கள் பல வருடங்கள் வாழ்கின்றனர். இதனால் இறைவன் மீதான நம்பிக்கை குறையாதா? (பாரதிசித்தன், கன்னியாகுமரி)

பதில்:- ஒரு போதும் நம்பிக்கை குறையாது. நல்லவர்களான ஆதிசங்கரர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், விவேகானந்தர்

கேள்வி:- கோவில்களில் தீபாராதனையின் போது 'அரோஹாரா' என்ற கோஷம் எழுப்புகிறார்கள். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் போது, இந்த கோஷம் அதிகமாக எழுப்பப்படுகிறது.'அரோஹாரா'என்பதன் பொருள் என்ன? (பா.ரவிச்சந்திரன், வேலூர்)

பதில்:- ஹரன்-அரன்-சிவபெருமான். இதைப்பற்றி காஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகள் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். "ஞானக் குழந்தையான ஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என ஆரம்பித்து, ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அந்தப்பாடலில் அவர், 'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே' எனப் பாடியிருக்கிறார். எங்கு பார்த்தாலும் 'அரன் நாமமே சூழ்க' என்றார். ஹரஹர என்று எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கோஷிக்க வேண்டும் என்று அந்தத் தெய்வக் குழந்தை போட்ட ஆக்ஞா(உத்தரவு) விசேஷத்தால் தான், இன்றளவும், 'நம: பார்வதீ பதயே' என்று ஒருவர் சொன்னால், நாம் அத்தனை பேரும், 'ஹரஹர மஹாதேவா' என்கிறோம்.

'அரோஹரா! அண்ணாமலைக்கு அரோஹரா!' என்றெல்லாம் அத்தனை பேரும் சேர்ந்து சொல்கிறோம். முருகனுக்குக் காவடி எடுத்து கோஷம் போட்டாலும் இந்த அரோஹரா தான். 'தண்டாயுதபாணிக்கு அரோஹரா' என்கிறோம்" என்பது காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் வாக்கு.

கேள்வி:- ஷீரடி சாய்பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களை வணங்கினாலும், இறையருளைப் பெறமுடியுமா? (த.சத்திய நாராயணன், அயன்புரம்)

பதில்:- பெற முடியும்.


Next Story