சுதர்சன சக்கர மகிமை


சுதர்சன சக்கர மகிமை
x

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. 'சுதர்ஷன்' என்றால் 'மங்களகரமானது' என்று பொருள். 'சக்ர' என்றால் 'எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது' என்று பொருள். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது. சாதாரணமாக 'சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால், விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை அழித்த பின் சுதர்சன சக்கரம், மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும், ஏவி விட்டவரின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப் பாதையில் செல்வதால், சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது. ஏதாவது தடை எதிர்பட்டால் சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய உருவம், வடிவம் எத்தகையது என்றால், சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

1 More update

Next Story