ஆலய தேர் பவனி


ஆலய தேர் பவனி
x

சாத்தான்குளம் புனிதமரியா மாசற்ற இருதய ஆலய தேர் பவனி நடந்தது

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் 161-ம் ஆண்டு பெருவிழா 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா கொடியேற்றினார். 10-ம் திருநாள் நிறைவு பெருவிழாவிற்கு தெற்கு கள்ளிகுளம் ஹெலன் பிளாரிற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மைய இயக்குனர் ராஜன் தலைமை தாங்கி புது நன்மை வழங்கினார். தொடர்ந்து புனித மாசற்ற இருதய அன்னையின் அற்புத தேர்ப்பவனி நடந்தது.

நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பல்வேறு சமயத்தினரும் கலந்து கொண்டு உப்பு மிளகு , மெழுகுவர்த்தி காணிக்கை செலுத்தினார்கள். பக்தர்களுக்கு நேர்ச்சை பழங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாலை சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் லியோன் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் மறையுரை வழங்கினார். திருவிழா நாட்களில் திருப்பவனி, ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் மற்றும் மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பங்குத்தந்தைகள் ஜோசப் கலைச்செல்வன், சேவியர் கிங்ஸ்டன், ஜோசப் ரெத்தினராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ரவி பாலன், உதவி பங்குத்தந்தை அந்தோணி பிரான்சிஸ் பிரதாப் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


Next Story