ஆதிபராசக்திஅம்மன் கோவில் குடமுழுக்கு


ஆதிபராசக்திஅம்மன் கோவில் குடமுழுக்கு
x

அதிராம்பட்டினம் ஆதிபராசக்திஅம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்;

அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கிதெரு ஆதிபராசக்திஅம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து 4 கால பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், அதிராம்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் ராமகுணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆறுமுககிட்டங்கிதெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story