மண்ணுமுடைய அய்யனார், பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு


மண்ணுமுடைய அய்யனார், பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு
x

அலிவலம் மண்ணுமுடைய அய்யனார்,பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம்- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அலிவலம் கிராமத்தில், பழமையான பூர்ண புஷ்கலா மண்ணுமுடைய அய்யனார் கோவில் உள்ளது. அதே பகுதியில் பக்தநேய ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இவ்விரு கோவில்களிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்றன. திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. மாலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.இன்று(புதன்கிழமை) காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.நாளை( வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு குறிச்சி செந்தில் ஆண்டவர் மந்திராலய நிறுவனர் தன. ராமலிங்க சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மண்ணுமுடைய அய்யனார், பக்தநேய ஆஞ்சநேயர் மற்றும் அதன் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அலிவலம் ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.


Next Story