திருக்கழுக்குன்றத்தில் பன்னிரு திருமுறை கிரிவல பெருவிழா


திருக்கழுக்குன்றத்தில் பன்னிரு திருமுறை கிரிவல பெருவிழா
x

திருக்கழுக்குன்றத்தில் பன்னிரு திருமுறை கிரிவல பெருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் மலையடிவாரத்தில் உற்சவமூர்த்தி நடராஜர் மற்றும் அம்மாள் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிவவாத்தியங்கள் முழங்க பன்னிரு திருமுறையை தலையில் சுமந்தவாறு வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர் வழிநெடுகிலும் திருவாசம் மற்றும் சிவபுராணம் என பல்வேறு சிவ பாடல்கள் பாடி சிவ நடனம் ஆடியபடி கிரிவலம் வந்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

1 More update

Next Story