இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 22 Jan 2024 7:23 AM IST (Updated: 22 Jan 2024 7:53 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம்.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-8 (திங்கட்கிழமை)

திதி: இரவு 9.06 க்கு மேல் திரயோதசி திதி

நட்சத்திரம்: நாள் முழுவதும் மிருகசீர்ஷம்

யோகம்: அமிர்தயோகம்

ராகு காலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

நெல்லை நெல்லையப்பர் பவனி. திருச்சேறை சாரநாதர் ராமாவதார காட்சி. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம். மதுரை மீனாட்சி-சொக்கநாதர் தேர் - சப்தாவர்ணம்.

ராசிபலன்

மேஷம்

மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்

சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம்.

மிதுனம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள், காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் பணி நீக் கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சிம்மம்

சுணங்கிய காரியங்கள் சுறு சுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

கன்னி

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்று குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

துலாம்

வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். திட்டமிட்ட காரியமொன்று திசைமாறி செல்லலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

விருச்சிகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக் குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு, திட்ட மிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

மகரம்

எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும்நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

கும்பம்

கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். கடன்சுமை குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மீனம்

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.


Next Story