குடமுழுக்கையொட்டி வேதபாராயணம்


குடமுழுக்கையொட்டி வேதபாராயணம்
x

நாங்கூர் நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கையொட்டி வேதபாராயணம் செய்யப்பட்டது/

மயிலாடுதுறை

திருவெண்காடு;

திருவெண்காடு அருகே நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 3-ம் கால யாக பூஜையும், மாலை 4-ம் கால யாக பூஜையும் நடந்தது. இதில் நறுமணப் பொருள்கள் இடப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவில் ஸ்தலத்தார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காவிரியில் இருந்து புனித நீரை கொண்டு வந்தனர். பின்னர் யாகசாலையில் வேதங்கள், திவ்ய பிரபந்தங்களை பாடி பெருமாளை வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story