திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி


திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி
x

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி

தஞ்சாவூர்

திருவையாறு,

ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தீர்த்தவாரி

திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று ஆடி அமாவாசையையொட்டி நடந்தது.

இதையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அப்பர் கயிலை காட்சி

அதனை தொடர்ந்து இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆலோசனைபடி கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

1 More update

Next Story