வண்ண லே–அவுட் வரைபடங்களில் கவனம் தேவை


வண்ண லே–அவுட்  வரைபடங்களில்  கவனம் தேவை
x
தினத்தந்தி 24 Feb 2017 8:00 PM GMT (Updated: 24 Feb 2017 10:38 AM GMT)

சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது நில விற்பனையாளர்கள் கொடுக்கின்ற லேஅவுட் வரைபடத்தை கவனமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது நில விற்பனையாளர்கள் கொடுக்கின்ற லேஅவுட் வரைபடத்தை கவனமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

பெரும்பாலான நில விற்பனையாளர்கள் லேஅவுட் வரைபடத்தை வண்ண வரைபடமாக வழங்குகின்றனர். அதில் குறிப்பிட்ட வீட்டு மனையை தனிநிறத்தில் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். வீட்டுமனை வாங்குபவர்களின் வசதிக்காகவே இவ்வாறு வழங்கப்படுகிறது. ஆனால் அது அசல் லேஅவுட் வரைபடம் அல்ல. எனவே வண்ண லேஅவுட் வரைபடத்தினை சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகரித்த லேஅவுட் வரைபடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடமிருந்து வீட்டுமனைக்கான வரைபடத்தினை  கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

பெரும்பாலும் லேஅவுட் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்களை கொண்டிருக்கும். எனவே  வாங்கப்படுகின்ற வீட்டு மனையானது லேஅவுட் வரைபடத்தில் எந்த சர்வே எண்ணின்கீழ் வருகிறது என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுமனையானது ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்களைக் கொண்டிருந்தால் அனைத்து சர்வே எண்களுக்கும் உரிய தாய்ப்பத்திர நகல்களை பெற்று சரிபார்க்க வேண்டும்.

Next Story