நுழைவு வாயிலின் முக்கியத்துவம்


நுழைவு வாயிலின்  முக்கியத்துவம்
x
தினத்தந்தி 15 April 2017 4:45 AM IST (Updated: 14 April 2017 6:03 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் தலைவாசல் என்பது பல அம்சங்களில் முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும்.

 எளிமையான பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் வீட்டைப்போன்று காட்டக்கூடிய தன்மை வீட்டின் தலைவாசலுக்கு உண்டு. பாரம்பரிய முறைப்படி வீட்டின் தலைவாசல் மட்டுமாவது மரத்தினால் அமைக்கப்படவேன்டும் என்ற நியதி பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. காரணம், ஒரு வீட்டின் தலைவாசல் என்பது அனைத்து மங்களங்களும் பொருந்திய இடமாக பார்க்கப்படுகிறது.

குடும்பத்தின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் லட்சுமிகரம் பொருந்திய அம்சங்கள் அனைத்தும் தலைவாசல் மூலமாகத்தான் வீட்டிற்குள் நுழைகின்றன என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டிற்கான கட்டுமான செலவுகள் சிறிய அளவாக இருந்தாலும், பெரிய அளவாக இருந்தாலும், அதற்கு தகுந்த விலையிலும், அளவிலும் வீட்டிலுள்ள அனைத்து அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் அமைக்கப்படுகின்றன. அப்படி முடியாத பட்சத்தில் தலைவாயில் மட்டுமாவது மரத்தால் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story