வீடு கட்டுவதற்கு முன்பு மண் பரிசோதனை அவசியம்
சென்னையில் பெரும் பாலான இடங்கள் ஏரி அல்லது மற்ற நீர் நிலைகளுக்கு அருகே இருந்த பகுதிகளாக உள்ளன.
சென்னையில் பெரும் பாலான இடங்கள் ஏரி அல்லது மற்ற நீர் நிலைகளுக்கு அருகே இருந்த பகுதிகளாக உள்ளன. அவ்வாறு நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கட்டுமானங்களை அமைப் பதற்கு முன்னர் தகுந்த மண் பரிசோதனைகளை செய்வது அவசியமானது. அதன் மூலம் மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட்டு அதற்கேற்ப ஆழமான அஸ்திவாரத்தை அமைத்து, கட்டுமானங்களை வடிவமைப்பதே பாதுகாப்பானது.
பல இடங்கள்
பொதுவாக, மண் பரிசோதனை என்றால் மனையில் உள்ள மண்ணை எடுத்துக் கொடுப்பது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால். மனையின் பல்வேறு இடங்களில் பல அடிகள் ஆழத்தில் துளைகள் இட்டு மண்ணை எடுத்து பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். பல இடங்களில் மண்ணை எடுத்து ஆய்வுகளை செய்வதன் மூலம் மனையின் தன்மை பற்றி கச்சிதமாக அறிய இயலும்.
சாலைகளை விட பள்ளம்
இன்றைய சூழலில் நிறைய மனைகள் சுற்றுப்புறங்களில் உள்ள சாலைகளை விடவும் பள்ளமான இடத்தில் அமைந்துள்ள காரணத்தால், மனைப்பகுதிகள் மண்ணால் நிரப்பப்பட்டு மேடாக மாற்றப்படுகிறது. அதன் காரணமாக வெவ்வேறு தன்மைகள் கொண்ட மண் வகைகள் கலந்திருப்பதால் அவற்றின் தாங்கு திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள, பரிசோதனை செய்வது அவசியமானதாகிறது.
விவசாய நிலம்
குறிப்பாக, இன்றைய சூழலில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாத விளை நிலங்கள், மனைப்பிரிவுகளாக மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற இடங்களில் மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்து பார்ப்பதோடு, உத்தேசிக்கப்பட்ட கட்டிட அமைப்புகளை தாங்கக்கூடிய அளவுக்கு மண்ணின் வலிமை இருக்கிறதா..? என்பதை தெரிந்து கொள்ள வேன்டும்.
ஈரப்பதம்
பொதுவாக, விவசாய நிலங்களில் உள்ள மண் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டு, அதை தக்கவைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம். மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழக்கூடிய தருணங்களில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற இடங்களில் மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதுதான் பாதுகாப்பானது. ஒருவேளை முன்னரே வீடு கட்டப்பட்டிருந்தால் அதன் அஸ்திவாரத்தை வலுப்படுத்துவது அவசியம்.

Related Tags :
Next Story