உங்கள் முகவரி

பழங்கால தமிழர்களின் கட்டுமான தொழில்நுட்பம் + "||" + Ancient Tamils Construction technology

பழங்கால தமிழர்களின் கட்டுமான தொழில்நுட்பம்

பழங்கால  தமிழர்களின் கட்டுமான  தொழில்நுட்பம்
பழங்காலத்திலேயே கட்டுமான துறையில் தமிழ் மக்கள் மேம்பட்ட கட்டுமான தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக இருந்து வந்ததை பல சான்றுகள் காட்டி வருகின்றன.
ழங்காலத்திலேயே கட்டுமான துறையில் தமிழ் மக்கள் மேம்பட்ட கட்டுமான தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக இருந்து வந்ததை பல சான்றுகள் காட்டி வருகின்றன. அதன் அடிப்படையில் சமீபத்தில் மதுரை அருகே கீழடி பகுதியில் நிலத்திற்கு

கீழே கண்டு பிடிக்கப்பட்ட பழங்கால தமிழர்களின் கட்டுமானங்கள் பற்றிய செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

வெப்ப உலைகள்

அதில் உறை கிணறு அமைப்புகள், சுட்ட செங்கல் மூலம் அமைக்கப்பட்ட சுவர்கள், சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட கூரை ஒடுகள், தொழிற்சாலையில் பயன்படும் இரண்டு அடுக்குகள் கொண்ட வெப்ப உலைகள் உள்ளிட்ட 2000–க்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

செங்கல் அளவுகள்


சுட்ட செங்கற்கள் மூலம் அமைக்கப்பட்ட திறந்த நிலை மற்றும் மூடிய நிலை கால்வாய்கள், சுடுமண் உறை கால்வாய், செங்கல் தொட்டி போன்ற அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. அங்குள்ள கட்டிட அமைப்புகள் 36–22–6,  34–21–5 மற்றும் 32–21–5 செ.மீ நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய அளவுகளில் தயாரிக்கப்பட்ட செங்கற்கள் கொண்டு வலிமையாக கட்டப்பட்டுள்ளன. அந்த அமைப்புகள் அவர்களது மேம்பட்ட கட்டுமான அறிவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.