போர்ட்லேண்டு சிமெண்டு வகைகள்


போர்ட்லேண்டு சிமெண்டு வகைகள்
x
தினத்தந்தி 9 Jun 2018 12:15 PM IST (Updated: 9 Jun 2018 12:15 PM IST)
t-max-icont-min-icon

சிமெண்டு என்பது கட்டுமானங்களுக்கு மிக அவசியமான இணைப்பு பொருளாக உள்ளது.

சிமெண்டு என்பதில் பல வகைகள் உள்ள நிலையில் போர்ட்லேண்டு பொசலொனா சிமெண்டு (PPC) மற்றும் ஆர்டினரி போர்ட்லேண்டு சிமெண்டு (OPC) என்ற இரு வகை தயாரிப்புகள் பரவலாக இருக்கின்றன.

அதாவது, அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் ‘பிளைஆஷ்’ (Fly Ash) என்ற ‘பொசலோன்’ பொருளை சேர்த்து அரைத்து தயாரிக்கப்படுவது ‘போர்ட்லேண்டு பொசலோனா சிமெண்டு’ ஆகும். பிளைஆஷ்-ல் இருக்கும் ‘ரியாக்டிவ் சிலிக்கா’ என்ற பொருள் கான்கிரீட் அமைப்புகளை நீண்டகாலம் உறுதியாக இருக்கும்படி செய்கிறது. ‘பிளைஆஷ்’ பொருளை ‘போர்ட்லேண்டு பொசலொனா சிமெண்டு’ தயாரிக்க பயன்படுத்துவதால், மாசு கட்டுப்பாட்டுக்கு அது துணையாக அமைவதோடு, புவி வெப்பமயமாதலை பெருமளவு குறைக்கவும் உதவுகிறது.

அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சிமெண்டு வகையாக போர்ட்லேன்ட் பொசலோனா சிமெண்டு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கட்டமைப்புகளுக்கு நல்ல உறுதியை அளிக்கக்கூடிய சிமெண்டு வகையாக ‘ஆர்டினரி போர்ட்லேண்டு சிமெண்டு’ இருந்தாலும், கட்டிடத்தின் ஆயுள், பராமரிப்பு செலவு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது, OPC வகை சிமெண்டை விடவும் PPC வகை சிமெண்டு தொழில்நுட்ப ரீதியாக சிறந்தது என்பது தொழில் நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 

Next Story