உங்கள் முகவரி

வாஸ்து மூலை : வீட்டின் தலைவாசல் அமைப்பு + "||" + Vastu corner: the gate of the house system

வாஸ்து மூலை : வீட்டின் தலைவாசல் அமைப்பு

வாஸ்து மூலை : வீட்டின் தலைவாசல் அமைப்பு
* தலைவாசலுக்கு அருகில் உள்ளே அல்லது வெளியே குப்பைக்கூடை வைப்பது தவிர்க்கப்படவேண்டும்.
* தலைவாசல் இரவு-பகல் ஆகிய எந்த நேரமானாலும் வெளிச்சமாக இருக்கவேண்டும்.

* குறிப்பாக, தலைவாசல் குப்பைகூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் எளிதாக வீட்டுக்குள் நுழையும்.

* தலைவாசலுக்கு நேர்எதிராக இன்னொரு வீட்டின் சுவர் இருந்தால், வீட்டுக்குள் நேர்மறை சக்திகள் நுழைவது தடுக்கப்படுவதாக ஐதீகம்.


* சொந்த வீடு அல்லது வாடகை வீடு ஆகிய எதுவானாலும் தலைவாசலுக்கு எதிரில் மின்கம்பம், வெறும் சுவர், இன்னொரு வீட்டு நுழைவாசல் அல்லது கோவில் போன்றவை அமைந்திருந்தால், எண்கோண கண்ணாடி ஒன்றை வெளியே பார்த்தவாறு தலைவாசலுக்கு மேற்புறம் மாட்டி வைக்கலாம் என வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.