மின்சார பாதிப்பை தடுக்கும் கான்கிரீட் கலவை


மின்சார பாதிப்பை தடுக்கும் கான்கிரீட் கலவை
x
தினத்தந்தி 13 July 2018 9:45 PM GMT (Updated: 13 July 2018 12:20 PM GMT)

புயல் மற்றும் மழைக்காலங் களில் உயரமான கான்கிரீட் அமைப்புகள் மின் அதிர்ச்சியால் தாக்கப்படுவதால் கட்டிடத்திற்குள் உள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழைக்காலங் களில் உயரமான கான்கிரீட் அமைப்புகள் மின் அதிர்ச்சியால் தாக்கப்படுவதால் கட்டிடத்திற்குள் உள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. கட்டிடத்தில் இடி தாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை முற்றிலும் பாதுகாப்பான முறை என்று உறுதியாகச் சொல்ல இயலாது. கான்கிரீட் அமைப்புகளுக்குள் இருக்கும் கம்பிகள் வழியாக மின்சாரம் கடத்தப்படும் நிலையில், கட்டிடத்திற்குள் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்று அறியப்பட்டுள்ளது. 

மின்சார பாதிப்பற்ற ‘ஷாக் புரூப்’ 

அதன் அடிப்படையில் மின் கடத்தாத கான்கிரீட் அமைப்புகளை உருவாக்கும் ஆய்வுகளை தைவான் நாட்டிலுள்ள நெப்ராஸ்கா லிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அதன் இறுதியில் மின்சார பாதிப்பை தவிர்க்கும் ‘ஷாக் புரூப்’
(Shock Proof Concrete)
  என்ற கான்கிரீட் வகை கண்டறியப்பட்டது. இந்த கான்கிரீட் கலவையை சுலபமாக அனைத்து கட்டிடங்களிலும் மேற்பூச்சாக அமைக்க இயலும். 

‘மேக்னடைட்’ உலோக படிமங்கள்

மின்சார தாக்குதல் காரணமாக கான்கிரீட்டிலுள்ள இரும்பு கம்பிகள் மின்சாரத்தை கடத்தாமல் தடுப்பதற்காக வழக்கமான கருங்கல் ஜல்லிகளுக்கு மாற்றாக ‘கார்பன்’ மற்றும் ‘மேக்னடைட்’ போன்ற தனிமங்கள் கலக்கப்பட்ட கலவை மேற்பூச்சாக பூசப்படும். அவை மின்காந்த அலைகளை ‘ஸ்பாஞ்ச்’ தண்ணீரை உறிஞ்சுவதுபோல தக்கவைத்துக்கொள்கின்றன. அதனால், மின் அலைகள் கடத்தப்படாத நிலையில் மின்சார பாதிப்பு என்ற ஆபத்திலிருந்து தப்பிக்க இயலும் என்பதே இதன் தொழில்நுட்பமாகும். 

மேலைநாட்டு கட்டுமான அனுமதி

குறிப்பாக, ஸ்பெயின், இத்தாலி, பிரேசில் போன்ற பல நாடுகள் ‘ஷாக்புரூப்’ கான்கிரீட் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், பள்ளிகள், பல்வேறு ஆய்வுக்கூடங்கள், விமான நிலையங்கள், உயரமான வணிக வளாகங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு மேற்கண்ட மின் கடத்தாத ‘கார்பன்’ மற்றும் ‘மேக்னடைட்’ கலந்த கான்கிரீட் தொழில்நுட்பம் சிபாரிசு செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. நமது நாட்டிலும் கூடிய விரைவில் இவ்வகை கான்கிரீட் அறிமுகம் ஆகலாம்.

Next Story