மேற்பரப்பை தாமாக சுத்தம் செய்யும் புதுமையான கண்ணாடி


மேற்பரப்பை  தாமாக சுத்தம்  செய்யும்  புதுமையான  கண்ணாடி
x
தினத்தந்தி 8 Sept 2018 3:00 AM IST (Updated: 7 Sept 2018 5:31 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய கட்டுமான தொழில் நுட்பத்தில் கண்ணாடி (GLASS) என்ற பொருள் இல்லாமல் அடுக்கு மாடிகளை வடிவமைப்பது இயலாது.

ன்றைய கட்டுமான தொழில் நுட்பத்தில் கண்ணாடி (GLASS) என்ற பொருள் இல்லாமல் அடுக்கு மாடிகளை வடிவமைப்பது இயலாது. பெரிய அளவிலான குடியிருப்புகள், அலுவலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளில் கண்ணாடியானது அதன் விஷேச தன்மை காரணமாக முக்கியமான கட்டுமான பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கண்ணாடிகள் உபயோகம்

அழகான தோற்றம் மற்றும் எளிதான பராமரிப்பு மற்றும் எந்த விதமான பொருளோடும் சுலபமாக இணைத்துக்கொள்ளும் கொள்ளும் அதன் தன்மை ஆகியவற்றால் கண்ணாடிகளின் உபயோகம் உலக அளவில் அதிகரித்து வருகிறது. பல்வேறு வகைகளில் இருந்தாலும் கட்டிட வடிவமைப்புக்கு சில வகைகள் மட்டுமே பயன்படுகின்றன. 

வெவ்வேறு வகைகள்

ஒளிபுகாத கண்ணாடிகள், உறுதியூட்டப்பட்ட கண்ணாடி, தகடு மற்றும் வளைவுகள் கொண்ட கண்ணாடி வகைகள் என்று வெவ்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, கண்ணாடிகள் அதிகப்படியான வெப்ப நிலைக்கு பின்னர் உடனடியாக குளிர்விக்கப்பட்டு உறுதியூட்டப்படுவதால், நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாகவும், எளிதில் சிதறும் தன்மை இல்லாமல் பாதுகாப்பாகவும் இருக்கின்றன. 

பாதுகாப்பான வகைகள்

கட்டிட வடிவமைப்புக்கு பயன்படும் சில வகைகளில் ஒளிபுகாத கண்ணாடிகள், உறுதியூட்டிய கண்ணாடி வகை, தகடு மற்றும் வளைவுகள் கொண்ட கண்ணாடிகள் என்பவை குறிப்பிடத்தக்கது. பொதுவாக, 

கண்ணாடிகளின் உறுதியூட்டப்பட்ட தன்மை காரணமாக நீண்ட காலம் உழைப்பதாகவும், சுலபமாக சிதறும் தன்மை இல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கின்றன. 

தாமரை இலை தொழில்நுட்பம்

தாவரங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை தகவமைப்பு மூலம் மனிதர்கள் கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தாமரை இலை மீது தண்ணீர் உள்ளிட்ட அழுக்குகள் ஒட்டாமல் தடுக்கும் உயிரித் தொழில் நுட்ப அணுகுமுறையை கண்ணாடியிலும் பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டது. அதாவது, தாமரை இ லையில் சுரக்கும் ஒருவகை மெழுகு போன்ற பொருள் அதன்மீது படிந்து அதை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அடிப்படையில் ‘செல்ப் கிளீனிங் கிளாஸ்’ உருவாக்கப்பட்டது.

‘நானோ கோட்டிங்’

செல்ப் கிளீனிங் என்பது தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் கண்ணாடி, அதாவது, அவற்றின் மேல் அழுக்கு, தூசு ஆகியவை எளிதில் படியாமல் சுத்தமாக இருக்கும். நானோமீட்டர் அளவில் மிக மெல்லிய தடிமனில் கண்ணாடியின் மேல் உருவாக்கப்படும் பூச்சு (Hydrophilic And Photocatalytic
 Coating) காரணமாக அதன் மேல் தூசுதும்புகள் படியாமல் பாதுகாக்கப்படுகிறது.

தூசிகள் தாமாக அகற்றப்படும்

மேற்கண்ட ரசாயன பூச்சுக்கள் காரணமாக கண்ணாடியின் மேற்புறம் சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தூசி முதலிய பொருட்கள் சிதைவடைந்து தாமாக அகற்றப்படுகின்றன. 

மேலும், அதன் இன்னொரு வகையில் மெல்லிய நீர்ப்படலம் கண்ணாடிப் பரப்பின்மேல் ஒட்டிக் கொள்ளுமாறு செய்யப்படுவதால், தண்ணீர் துளிகள் கண்ணாடியின் மேற்பரப்பில் படியும் தூசி தும்புகளை ஒட்ட விடாமல் கழுவி வெளியேற்றி விடுகின்றன. அதனால், கண்ணாடியின் மேற்பரப்பு எப்போதும் சுத்தமான தோற்றத்துடன் இருக்கிறது.

Next Story