கட்டிட வெளிப்புறத்தை அழகு செய்யும் கண்ணாடி அமைப்புகள்


கட்டிட வெளிப்புறத்தை அழகு செய்யும் கண்ணாடி   அமைப்புகள்
x
தினத்தந்தி 29 Sept 2018 8:30 AM IST (Updated: 28 Sept 2018 4:23 PM IST)
t-max-icont-min-icon

உயரமான பல அடுக்கு மாடி கட்டிடங்களின் வெளிப்புற சுவர்களில் கண்கவரும் குளிர் கண்ணாடி பரப்பினை பொருத்தப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருப்போம்.

அத்தகைய அமைப்புகளை ‘கிளேஸிங்’ (Glazing) என்று குறிப்பிடுவார்கள். கட்டிடங்களின் உட்புறமாக வெளிச்சம் எளிதாக நுழைவது மற்றும் கான்கிரீட் பயன்பாடு குறைவு என்ற அம்சங்கள் அவற்றின் முக்கிய நோக்கமாகும்.

கட்டிட பளு குறையும்

செங்கல் அல்லது கான்கிரீட் பிளாக்குகளால் சுவர்கள் அமைப்பதற்கு பதிலாக அகலமான கண்ணாடி அமைப்புகளை பொருத்துவதால், மின் விளக்குகள் பயன்பாடு குறைகிறது என்ற நிலையில் மின்சார சேமிப்புக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளன. உயரமாக அமைக்கப்படும் கான்கிரீட் கட்டுமானங்களில் ‘டெட் லோடு’ என்ற சிக்கலை தவிர்க்கும் தொழில்நுட்பமாக கவனிக்கப்படும் ‘கிளேசிங்’ அமைப்புகள் பல வகைகளில் உள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு வகைகள் பற்றி இங்கே காணலாம்.

ஒற்றை அடுக்கு கண்ணாடி

கண்ணாடிகளை ஒரே அடுக்காக (single clear glazing) பளு தாங்காத வெளிப்புற சுவருக்கு பதில் அமைக்கப்படுவது இந்த முறையாகும். அதன் காரணமாக, இயற்கை வெளிச்சம் முழுமையாக கட்டிடத்திற்குள் நுழையும். மேலும், வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் எளிதாக உள்ளே வருவதால், குளிர்ச்சி வெளியேறி வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கட்டிடத்திற்குள் வெளிச்சம் எப்போதும் வேண்டும் என்ற நிலையில் இந்த முறை ஏற்றது.

இரட்டை அடுக்கு கண்ணாடி

மேற்கண்ட ‘கிளேசிங்’ அமைப்பை விட இந்த முறை சற்று ‘அட்வான்ஸ்’ தொழில் நுட்பமாகும். வெப்பத்தை தடுக்கும் தன்மை கொண்ட இரண்டு அடுக்கு கண்ணாடி பரப்புகள் (double clear glazing) இம்முறையில் பொருத்தப்படும். இரண்டு கண்ணாடி அடுக்குகளுக்கு இடைவெளியில் காற்று இருப்பதால், கண்ணாடி–காற்று–கண்ணாடி என்ற வரிசையில் வெப்பம் கடந்து வர வேண்டிய பாதை அமையும். அதனால், அறைக்குள் வெப்பம் அல்லது குளிர்ச்சி ஆகியவறின் காரணமாக எவ்வித மாற்றமும்உண்டாகாது.

குறை கதிர் வீச்சு ஒற்றை கண்ணாடி  

சூரிய கதிர்கள் உட்புகும் நிலையில் அவற்றை மீண்டும் வெளியேறுவதை கட்டுப்படுத்த இந்த முறை (லிஷீஷ் ணினீவீssவீஸ்வீtஹ் sவீஸீரீறீமீ ரீறீணீக்ஷ்வீஸீரீ) பயன்படுகிறது. வெளிச்சமும், வெப்பமும் கிடைப்பதோடு, பாதிப்பை தரக்கூடிய ஒளி அலைகளையும் தடுக்க முடியும். அகச்சிவப்பு கதிர் வீச்சு காரணமாக ஏற்படும் அபாயங்களை தவிர்ப்பதுடன், அறைக்குள் வெயில் விழுந்தாலும் வெப்பம் அதிகரிப்பதில்லை.

குறை கதிர் வீச்சு இரட்டை கண்ணாடி   

இந்த முறையில் (Low Emissivity single glazing) கண்ணாடி தகடுகளின் மேற்புறத்தில் விஷேச பூச்சுக்கள் அமைக்கப்படும். கண்ணாடி தகடுகளுக்கு இடைவெளிகளில் ‘கிரிப்டான்’ அல்லது ‘ஆர்கான்’ போன்ற வாயுக்கள் நிரப்பப்படுவது, இந்த வகை ‘கிளேசிங்’ அமைப்பின் சிறப்பாகும். அதன் காரணமாக, குளிர் காலத்திலும், வெயில் காலத்திலும் தட்பவெப்ப மாறுபாடுகள் காரணமாக அறைகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
1 More update

Next Story