கண்களை கவரும் நவீன மேற்கூரைகள்


கண்களை கவரும்  நவீன  மேற்கூரைகள்
x
தினத்தந்தி 27 Oct 2018 12:00 AM GMT (Updated: 26 Oct 2018 12:11 PM GMT)

மேல்மாடிகளில் நிழலுக்காக சிறிய அளவில் கூரைகள் அமைக்க ‘பாலி கார்பனேட்’ கூரைகள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

அவை குறைந்த எடை கொண்டதாகவும், கட்டமைப்பின் எடையை இரும்பை விடவும் எளிதாக தாங்கக்கூடியதாகவும் இருப்பதால் அவற்றை மாற்றுவது அல்லது மீண்டும் பிரித்து அமைப்பது போன்ற பணிகளை எளிதாக செய்யலாம்.  போதுமான பராமரிப்புகள் இல்லாத ஸ்டீல் அமைப்புகள் எளிதாக துருவால் பாதிக்கப்படுகின்றன. 

‘பாலி கார்பனேட்’ அமைப்புகளில் துரு பிரச்சினை இல்லை என்பதோடு 200 டிகிரி வரை வெப்பத்தையும் தாங்கி நிற்கக்கூடிய தன்மை கொண்டதால் தரை மற்றும் கூரை ஆகியவை ‘பாலி கார்பனேட்’ தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

Next Story