விரைவான கட்டிட பணிகளில் எந்திரங்களின் பங்கு


விரைவான கட்டிட பணிகளில் எந்திரங்களின் பங்கு
x
தினத்தந்தி 27 Oct 2018 8:17 AM GMT (Updated: 27 Oct 2018 8:17 AM GMT)

பழுதான பழைய கட்டிடங்களை இடித்து அகற்றுவது, உறுதியான மண் இல்லாத இடங்களில் ஆழமான அஸ்திவாரம் தோண்டுவது, உயரமான இடங்களில் செய்யப்படும் கட்டுமான வேலைகள் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு கொண்ட ‘ரோபோக்கள்’ எளிதாக செய்து முடிக்கின்றன.

ஒரே மாதிரியான வேலைகள், அதிக பரப்பில் அமைக்க வேண்டிய கான்கிரீட் வேலைகள், அதிக எடைகளை கையாண்டு செய்யப்படும் கட்டுமான வேலைகள் போன்றவற்றை செய்யவும் நுட்பமான எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

20 வருடங்களுக்கு முன்னர் பெரிய அளவிலான கட்டுமான பணிகளை செய்து முடிக்க ஐந்து அல்லது ஆறு வருட கால அவகாசம் தேவைப்பட்டது. மேலும், மனித உழைப்பினால் அனைத்து பணிகளையும் செய்து வந்த காரணத்தால் செலவுகளும் அதிகமாகி வந்தது.

இன்றைய நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குள் 24 அடுக்குகள் கொண்ட மாடியை பல்வேறு எந்திரங்கள் மூலம் கட்டி முடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story