கட்டிட பணிகளில் பயன்படும் சிமெண்டு வகைகள்
கட்டுமான அமைப்புகளின் தன்மைகளுக்கு ஏற்ப சிமெண்டு தயாரிப்பில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
உலக நாடுகளில் உள்ள கட்டுமான பொறியாளர்கள் கட்டுமானத்தின் தன்மை உள்ளிட்ட இதர காரணங்களின் அடிப்படையில் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட கட்டுமானம், அதன் வடிவமைப்பு, மேற்கொள்ளப்படும் கட்டுமான முறைகள், நிலத்தின் தன்மை, நிலத்தடி நீர், தட்ப வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், சுற்றுப்புற சூழல் மற்றும் காற்றில் கலந்துள்ள ரசாயனங்கள் போன்ற வெவ்வேறு காரணங்களை கவனத்தில் கொண்டே கட்டுமான பொறியாளர்கள் சிமெண்டு வகையை தேர்வு செய்கிறார்கள்.
போர்ட்லேன்ட் பொசலோனா, ஆர்டினரி போர்ட்லேண்ட், ஒயிட் போர்ட்லேன்ட் ஆகிய சிமெண்டு வகைகள் சந்தையில் பரவலாக கிடைப்பதுடன் இதர வகைகளும் நுகர்வோர்களது தேவைகளுக்கேற்ப சந்தையில் கிடைக்கின்றன. வழக்கமான கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு சிமெண்டு வகைகள் பற்றி இங்கே காணலாம்.
1) போர்ட்லேன்ட் பொசலோனா சிமெண்டு
2) ஆர்டினரி போர்ட்லேன்ட் சிமெண்டு (33-43-53 கிரேடுகள்)
3) சல்பேட் ரெசிஸ்டிங் போர்ட்லேன்ட் சிமெண்டு
4) ராபிட் ஹார்டனிங் போர்ட்லேன்ட் சிமெண்டு
5) போர்ட்லேன்ட் பிளாஸ்ட் பர்னஸ் சிலாக் சிமெண்டு
6) ஒயிட் போர்ட்லேன்டு சிமெண்டு
7) ஹை அலுமினா சிமெண்டு
8) ஆயில் வெல் சிமெண்டு
9) லோ ஹீட் போர்ட்லேன்டு சிமெண்டு
10) சூப்பர் சல்பேட்டடு சிமெண்டு
11) ஹைட்ரோபோபிக் போர்ட்லேன்ட் சிமெண்டு
12) மேசன்ரி சிமெண்டு
Related Tags :
Next Story