உப்பு காற்றின் அரிப்பை தடுக்கும் சுவர் அமைப்பு


உப்பு காற்றின் அரிப்பை தடுக்கும் சுவர் அமைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 3:25 PM IST (Updated: 24 Nov 2018 3:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போன்ற நகரங்களின் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட கட்டுமானங்களின் வெளிப்புற சுவர்கள் உப்புக்காற்றால் பாதிக்கப்படுகின்றன.

அவற்றை தவிர்க்க கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பத்தில் ‘கம்போசிட்’ முறையிலான சுவர் அமைப்பை கட்டுமான வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதாவது, சுவர்களின் வெளிப்புறம் கருங்கல் கொண்டும், உள்பக்கம் செங்கல் அமைப்பாகவும் கட்டப்படும். வெளிப்புற கருங்கல் சுவருக்கு மேற்பூச்சு பணிகள் வேண்டியதில்லை. உள் பக்க செங்கல் சுவருக்கு மட்டும் பாயிண்டிங் அல்லது மேற்பூச்சு வேலைகளை தேவைக்கேற்ப செய்து கொள்ளலாம்.

உள் பக்கம் செங்கல் சுவராக இருப்பதால் ‘ஒயரிங்’ உள்ளிட்ட குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், கருங்கலுக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை இருப்பதால் செங்கல் சுவர் மூலம் வெளிப்புற வெப்பம் வீட்டுக்குள் வராமல் தடுக்கப் படுகிறது. 

Next Story