சிமெண்டு பயன்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்


சிமெண்டு பயன்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:57 AM IST (Updated: 8 Dec 2018 11:57 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்டு மூட்டைகள் வந்தவுடன் கீழ்க்கண்ட விபரங்களை சரி பார்த்த பின்னர் பயன்படுத்துவது பாதுகாப்பான முறையாகும்.

* கட்டிடத்தின் கட்டுமான பணிகள் அனைத்திற்கும் ஒரே கம்பெனியின் சிமெண்டு பயன்படுத்தப்படுவது பல நன்மைகளை அளிக்கக்கூடியதாக அறியப்பட்டுள்ளது.

* பணிகளுக்காக வாங்கப்பட்ட சிமெண்டு மூட்டையின் ஒரு பக்கத்தில் மட்டும் எந்திரம் மூலம் தையல் போடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். காரணம், கலப்படம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் புதிய கைத்தையல் மூலம் மூட்டை இணைக்கப்பட்டிருக்கும்.

* சிமெண்டு மூட்டையில் ISI முத்திரை மற்றும் உற்பத்தி செய்த வாரம் குறிப்பிடப்பட்டிப்பதை கவனித்து சமீபத்தில் தயாரிக்கப்பட்டவையா என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது, W /5 2018 என்றால் ஜனவரி கடைசி வாரத்தில் தயாரானது என்று பொருள். W /24 2018 என்றால் ஜூன் இரண்டாவது வாரத்தில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்.

* பொதுவாக, 12 வாரங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டு வலுவான கட்டுமான அமைப்புக்கு ஏற்றதாக இருக்கும். இந்த கால அளவு கடந்திருந்தால் தக்க பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அதை உபயோகிப்பது நல்லது.

* கட்டுமான பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சிமெண்டு, மணல் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கட்டுமான பணிக்கு ஏற்றவாறு கலவையின் விகிதங்களில் வித்தியாசம் வேண்டும். அதாவது, சுவர் கட்டுமானம், பூச்சு வேலை மற்றும் கான்கிரீட் என பணிகளின் தன்மைக்கு ஏற்ப கலவையை தயார் செய்து பயன்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விரிசல்கள் ஏற்படலாம்.

* கலவை தயாரிப்பில் முதலில் மணல் மற்றும் சிமெண்டு ஆகியவை சரியாக ‘மிக்ஸ்’ ஆகியிருக்கவேண்டும். சிமெண்டு அதிகமாகவும், மணல் குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் . சிமெண்டு, மணல் கலவையுடன் தண்ணீர் கச்சிதமான அளவில் சேர்க்கப்பட்டு, சிமெண்டு, மணல், தண்ணீர் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கப்பட்டிருப்பதை அனைத்து நிலையிலும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

* சிமெண்டு என்பது பல கிரேடுகளை கொண்டது என்ற நிலையில் மொத்த கட்டுமான பணிகளுக்கும் ஒரே வகையான சிமெண்டு கிரேடு பயன்படுத்தப்படுவது சரியான முறையல்ல என்று பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவிர்க்க வேண்டும். அதாவது, கட்டுமானம் மற்றும் சுவர் மேற்பூச்சு ஆகியவற்றிற்கு ஒரே வகை சிமெண்டு கிரேடு பயன்படுத்துவது சரியானதல்ல என்று பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். 

Next Story