குடியிருப்புகளில் அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள்


குடியிருப்புகளில்  அமைக்கப்படும்  நகரும்  படிக்கட்டுகள்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:30 PM GMT (Updated: 28 Dec 2018 10:03 AM GMT)

ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் மேல் தளங்களுக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் மேல் தளங்களுக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். விதவிதமான வடிவங்களிலும், அமைப்புகளிலும் உள்ள படிக்கட்டுகளில் முதியோர்கள் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏறிச்செல்வது சிரமமானதாக இருக்கும்.

பல்வேறு ‘லிப்ட்’ வகைகள்

அதற்கான தீர்வாக ‘லிப்ட்’ என்ற மின்தூக்கிகள் கட்டமைப்புகளில் பொருத்தப்பட்டன. காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவற்றின் அமைப்பு மற்றும் பயன்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு, ஒருவர் அல்லது இருவர் மட்டும் செல்லக்

கூடிய வகையிலான ‘குட்டி லிப்டுகள்’ வீடுகளில் பொருத்தப்பட்டன. அதன் தற்போதைய நவீன வடிவமாக மாடிப்படிகளின் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தண்டவாளங்களின் வழியாக மேலே ஏறிச்செல்லும் ‘சேர் லிப்ட்’ அமைப்புகள் உள்ளன.  

‘எஸ்கலேட்டர்கள்’ அமைப்புகள்

பெரிய அளவில் உள்ள ‘ஷாப்பிங் மால்’ போன்ற வர்த்தக கட்டமைப்புகளில் லிப்ட் அமைப்பு மட்டும் போதுமானதாக இருக்காது என்ற நிலையில் எஸ்கலேட்டர்கள் என்ற நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. அவற்றின் வடிவமைப்பு காரணமாக மேலே ஏறுவதற்கு அல்லது கீழே இறங்குவதற்கு மட்டும் ஏற்றதாக இருக்கின்றன. 1890–களில் காப்புரிமை பெறப்பட்ட எஸ்கலேட்டர்களின் அடிப்படை அமைப்பில் இன்று வரையில் மாற்றம் ஏதுமில்லை.

‘குட்டி எஸ்கலேட்டர்’

லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பேராசிரியர் ஜாக் லெவி என்பவரால் Levytator  என்ற குட்டி எஸ்கலேட்டர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. வீடுகளில் பொருத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மேலும், கீழுமாக இரு திசைகளிலும் இயங்கக் கூடியதாகும். 

எளிதாக அமைக்கலாம்

மூடப்பட்ட லிப்டுகளுக்குள் இருப்பதால் பயத்தை உணர்பவர்கள், முதியோர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏற்ற ‘சிம்பிள் டெக்னாலஜியாக குட்டி எஸ்கலேட்டர்’ உள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, வீடுகளில் அமைந்துள்ள மாடிப்படி கட்டமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு இவ்வகை எஸ்கலேட்டர்களை பொருத்த இயலும் என்றும், கட்டிடங்களில் உள்ள மற்ற பகுதிகளை இடிக்கவோ மாற்றவோ வேண்டியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேல் நாடுகளில் வில்லா டைப் வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் 10–க்கும் குறைவான படிகள் கொண்ட ‘குட்டி எஸ்கலேட்டர்’ அமைப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. நமது பகுதிகளில் இந்த முறை இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

Next Story