உங்கள் முகவரி

வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு + "||" + Tree, plant, vines grown in housing

வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு

வீட்டு மனைகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பு
வீடு கட்ட தொடங்கும் முன்னரே மரம், செடி, கொடிகளுக்கான தக்க இடத்தை தேர்வு செய்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
சிறிது காலத்தில் வீடு கட்டி முடிக்கும்போது அழகான தோட்டமாகவோ அல்லது மரமாகவோ வீட்டில் அவை வளர்ந்து அழகை கூட்டும். புது வீடு கட்டும்போது சுவருக்கு அருகில் ஏற்கெனவே மரம் இருந்தால் அதை வெட்டி விடாமல், சுவருக்கு இணையாக சின்ன கால்வாய் எடுத்து, மரத்தின் பக்கவாட்டு வேர்களை மட்டும் வெட்டிவிட்டால் மரத்தால் தொந்தரவு இருக்காது.