மனையின் அஸ்திவார பரப்பளவை கணக்கிடும் சுலபமான முறை


மனையின்   அஸ்திவார   பரப்பளவை கணக்கிடும்   சுலபமான   முறை
x
தினத்தந்தி 22 March 2019 10:00 PM GMT (Updated: 22 March 2019 12:56 PM GMT)

குறிப்பிட்ட மனை அல்லது இடத்தில் வீடு கட்டுவதற்கான அஸ்திவார குழியின் மொத்த கனஅடி அளவை எவ்வாறு கணக்கிடுவது என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதுண்டு.

குறிப்பிட்ட மனை அல்லது இடத்தில் வீடு கட்டுவதற்கான அஸ்திவார குழியின் மொத்த கனஅடி அளவை எவ்வாறு கணக்கிடுவது என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதுண்டு. பொதுவாக, அனைத்து மனைகளும் செவ்வக வடிவமாகவோ அல்லது சதுர வடிவமாகவோ கச்சிதமான அளவுகள் கொண்டதாக இருப்பதில்லை. அதாவது, இருபுறமும் ஒரே அளவில் அகலம் மற்றும் ஒரே அளவில் நீளம் என்று அமைந்திருக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அந்த நிலையில் நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்ட இடம் அல்லது மனையின் அஸ்திவார பரப்பளவை கண்டறியும் எளிதான முறை பற்றி கீழே காணலாம். 

சம்பந்தப்பட்ட மனையின் தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து, நேர்கோட்டில் வடமேற்கு முனை வரை உள்ள அளவை குறித்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அங்கிருந்து ஈசானியம் வரை நேர் கோட்டில் உள்ள அளவை குறித்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, ஈசானியம் முதல் தென்கிழக்கு மூலை வரை உள்ள அளவை கணக்கிட்டு கொள்ளவும். கடைசியாக, தென்கிழக்கிலிருந்து முதலில் ஆரம்பித்த இடமான தென்மேற்கு மூலை வரை உள்ள அளவை குறித்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட அளவுகள்படி வடக்கு பக்கம் 45 அடி, தெற்கு பக்கம் 50 அடி, மேற்கு பக்கம் 60 அடி, கிழக்கு பக்கம் 65 அடி என்று இருப்பதாக கொண்டால், நான்கு அளவுகளையும் கூட்டி வரும் எண்ணிக்கையான 220 என்கிற நீளம்தான் மொத்த அஸ்திவாரத்தின் அளவாகும். இந்த முறையில் பெறப்பட்ட நான்கு அளவுகளையும் கூட்டி வரும் மொத்த அளவு ‘ரன்னிங் பீட்’ என்று சொல்லப்படும். 

அஸ்திவாரம் எவ்வளவு அகலம் மற்றும் ஆழம் என்பதை முடிவு செய்துகொண்டு, மேலே கண்ட 220 அடியுடன், ஆழம் மற்றும் அகலம் ஆகிய அளவுகளை பெருக்கினால் கிடைப்பதே அஸ்திவாரத்தின் மொத்த கன அடி அளவாகும். அதாவது, ஆழம் 6 அடி மற்றும் அகலம் 3 அடி என்ற நிலையில், அவற்றை மேற்கண்ட 220 அடியுடன் பெருக்கி வரக்கூடிய 3960 என்பதே மொத்த அஸ்திவாரத்தின் கன அடி அளவாகும். அதன் அடிப்படையில் அஸ்திவாரத்திற்கான பட்ஜெட்டை கணக்கிட்டு பணியை செய்து முடிக்கலாம்.

Next Story