உங்கள் முகவரி

பெயிண்டிங் பணிகளில் உதவும் ‘புளூ டேப்’ + "||" + 'Blue tape' that helps in painting works

பெயிண்டிங் பணிகளில் உதவும் ‘புளூ டேப்’

பெயிண்டிங்  பணிகளில் உதவும் ‘புளூ டேப்’
அறையில் உள்ள ஒரு சுவருக்கு குறிப்பிட்ட ஒரு நிறத்திலும், அதன் பார்டர் என்ற விளிம்பு பகுதிகளுக்கு வேறொரு நிறத்திலும் ‘பெயிண்டிங்’ செய்ய வேண்டியதாக இருக்கலாம்.
றையில் உள்ள ஒரு சுவருக்கு குறிப்பிட்ட ஒரு நிறத்திலும், அதன் பார்டர் என்ற விளிம்பு பகுதிகளுக்கு வேறொரு நிறத்திலும் ‘பெயிண்டிங்’ செய்ய வேண்டியதாக இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் ஒட்டு நாடாக்கள் உதவியாக இருக்கின்றன. அதாவது, ஒரு சுவரின் நான்கு ஓரங்களில் பச்சை வண்ண பார்டரும், அதன் உட்புறத்தில் மஞ்சள் வண்ணமும் பூச வேண்டும் என்றால், முதலில் சுவர் விளிம்புகளில் நாடாவை ஒட்டிவிட வேண்டும். 

பின்னர், உட்புற பகுதிக்கான மஞ்சள் பெயிண்டு பூசும்போது, அது சுவரின் விளிம்புகளில் நாடாவை தாண்டி செல்லாமல் தடுக்கப்படும். அந்த நிறத்தை சுவரின் உட்புறத்தில் பூசி முடித்ததும், நாடாவை பிரித்து எடுத்து விடலாம். பின்னர், பார்டர் பகுதியில் பச்சை நிறம் பூசும்போது வேறொரு டேப்பை, முன்னர் பூசிய மஞ்சள் நிற பெயிண்டிங் விளிம்பு பகுதியில் ஒட்டிவிட்டு, பார்டருக்கு பச்சை நிறத்தை பூசி விட்டு, டேப்பை அகற்றி விடலாம். இந்த முறையில் இரு வண்ணங்களும் இணையும் பார்டர் பகுதி இரு வெவ்வேறு நிறங்களால் பாதிக்கப்படாமல் கச்சிதமான நேர் கோட்டில் அமைந்திருக்கும்.   

இதைப்போல், தற்காலிகமாக மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்து விட்டும் பெயிண்டிங் பணிகளை செய்ய இயலும். அது ‘டிரிம்’ செய்வது என்று சொல்லப்படும். ஒட்டு நாடா உதவி இல்லாவிட்டால், நீளமான ஸ்கேல் கொண்டு கோடு போட்டு, அதை ஒட்டியவாறு பெயிண்டிங் பணிகளை செய்ய வேண்டியதாக இருக்கும். 

இந்த ‘டேப்’ வகைகளை பெயிண்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். அவர்கள் ‘புளூ டேப்’ என்று அதை குறிப்பிடுகிறார்கள். அதன் பெயர்தான் நீல நாடாவே தவிர, அது புளூ நிறத்தில் பெரும்பாலும் இருப்பதில்லை. வெவ்வேறு வண்ணங்களிலும் இருக்கலாம். தற்காலிகமாக ஒட்டிக் கொள்ளவும், பின்னர் சுலபமாக பிரித்து எடுக்கவும் இவ்வகை ‘டேப்கள்’ ஏற்றதாக அமைந்திருக்கும். இன்டீரியர் அலங்கார பணிகளை செய்பவர்களுக்கும் இந்த டேப் பெரும் உதவியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.