கட்டிடங்களின் உறுதியை அறிய உதவும் தொழில்நுட்பம்


கட்டிடங்களின் உறுதியை அறிய உதவும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 11 May 2019 3:45 AM IST (Updated: 10 May 2019 9:20 PM IST)
t-max-icont-min-icon

கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆன கட்டமைப்புகளின் உறுதி பற்றியும், விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ‘மோடல் சிக்நேச்சர் டேட்டாபேஸ்’ என்ற தொழில் நுட்பம் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

பல்வேறு மேலை நாடுகளில் பழைய பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் உறுதியை கண்டறிய இந்த முறை கடைபிடிக்கப்படு கிறது.

இந்த எளிய தொழில்நுட்பத்தை குறைவான செலவில் மேற்கொள்ள இயலும். இந்த முறையின்படி கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகளில் ‘அக்ஸலெரோ மீட்டர்’ பொருத்தப்பட்டு, 3 மாதத்திற்கு ஒரு முறை ‘ஸ்மார்ட்’ சுத்தியல் கொண்டு தட்டப்படும். அவ்வாறு தட்டும்போது, கட்டமைப்பின் உட்புறம் எழக்கூடிய அதிர்வுகள், ‘மோடல் சிக்நேச்சர்களாக’ பதிவு செய்யப்படு கிறது.

அந்த தகவல்களை ஒரு டேட்டாபேஸ் வடிவத்தில் அமைத்து, ‘மோடல் ஸிக்நேச்சர்’ மாறுபாடுகள் கணக்கிடப்படும். அவற்றின் அடிப்படையில் கட்டிடத்தின் எப்பகுதி வலிமை குறைந்துள்ளது என்பதையும், விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களும் அறிந்து கொள்ளப்படுகிறது.

Next Story