மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு


மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு
x
தினத்தந்தி 18 May 2019 8:51 AM IST (Updated: 18 May 2019 8:51 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துக் கொள்வதன் மூலம் பெரிய செலவுகள் இல்லாமல் நிலத்தடி நீரை சேமிக்கலாம்.

குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துக் கொள்வதன் மூலம் பெரிய செலவுகள் இல்லாமல் நிலத்தடி நீரை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

மாடியில் சேரும் மழை நீர் குழாய்கள் மூலம் ஒரே இடத்துக்கு வருவதுபோல் ஒரே குழாய் அல்லது ஒவ்வொரு குழாயையும் இணைப்பதுபோல அமைத்த வடிகால் அமைப்பு, மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்கு சென்று சேர வேண்டும்.

மழை நீர் குழாய் என்பது சுமார் 3 அடி விட்டம், 10 அடி ஆழம் கொண்டதாகவும், அதில் 6 முதல் 8 அடிக்கு உடைத்த செங்கற்கள் நிரப்பி, அதற்கு மேல் இரண்டு அடிக்கு மணல் நிரப்பி குழியை மூடிவிடலாம்.

அந்த தொட்டி சுவரை ஒட்டியவாறு அமைக்காமல், சுவரிலிருந்து ஐந்து முதல் பத்து அடி இடைவெளிக்குள் அமைப்பது நல்லது.



Next Story