புதிய கட்டுமானங்களை அமைக்க பொறியாளர் சான்று அவசியம்


புதிய  கட்டுமானங்களை  அமைக்க  பொறியாளர்  சான்று  அவசியம்
x
தினத்தந்தி 25 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் கட்டமைப்புகள் பாதுகாப்புவிதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று அரசு கருதியது.

பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் கட்டமைப்புகள் பாதுகாப்புவிதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று அரசு கருதியது. அதன் அடிப்படையில்கூடுதல் விதிமுறைகளை அமல்படுத்தவும் திட்டமிட்டது. அதற்காக, கட்டுமானத் துறை சங்கங்கள்உள்ளிட்டஇதர அமைப்புகளிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்தநிலையில், கட்டுமான துறையில் புதிய விதிமுறைகளைகடந்தபிப்ரவரிமாதத்தில்அரசாணையாக வெளியிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் இனிமேல் அமைக்கப்படும் வீடுகள், அடுக்குமாடி டியிருப்புகள், மல்டிபிள் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இதர கட்டுமானங்கள் அனைத்தும் அரசின் பதிவுபெற்ற என்ஜினியரது சான்று பெற்றபின்னரே அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பதிவு பெற்ற பொறியாளர்கள்

அரசின் உத்தரவுப்படி கடந்தபிப்ரவரியில் இருந்து வீடு கட்டுவதற்கானதிட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்டஅனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்றஎன்ஜினீயர்கள்தான் செய்ய வேண்டும். மேலும், 12 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டிடங்களுக்கு பதிவுபெற்ற கட்டிடக் கலை நிபுணர் அல்லது பதிவுபெற்ற பொறியாளர் அனுமதிஅவசியம். அரசின் இந்தஉத்தரவால், வீடுகள்உள்ளிட்டஇதர கட்டிடங்கள் இடிந்து விழுவது அல்லது விரிசல் உள்ளிட்ட சேதங்கள்ஏற்படுவது ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்டஎன்ஜினியரே முழு பொறுப்பு ஆவார். கட்டுமானத்தில் ஏற்பட்ட குறைபாடுகளின் அடிப்படையில் அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்தின் உயரம்

12 மீட்டருக்கு மேல் 18 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த  கட்டுமானங்களை அமைக்க பதிவு பெற்ற டெவலப்பரின் அனுமதி வேண்டும். மேலும், ஸ்டக்சுரல் என்ஜினீயர், கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ஜினீயர், ஜியோ டெக்னிக்கல் என்ஜினீயர் ஆகியோர்களது அனுமதியும் அவசியம். கட்டிட பணிகள் முடிந்த பிறகு, திட்டஅனுமதியின்படி சம்பந்தப்பட்ட கட்டுமானம் அமைந்துள்ளது என்று மேலே குறிப்பிட்டஎன்ஜினீயர்களின் அனுமதியின் பேரில்தான் கட்டுமானப்பணி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும். இதன் மூலம் தரமான கட்டமைப்புகள் உறுதி செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது.   

அரசிடம் பதிவு

கட்டுமான பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படித்தவர்கள்அவர்களது பட்டப்படிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படியில் கிரேடு வரிசையில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்தவர்கள்என்ஜினீயர் சான்று பெறமாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ–வில் பதிவு செய்து கொள்ளலாம். மற்றமாவட்டங்களை சேர்ந்தவர்கள்சம்பந்தப்பட்டஉள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்து கொள்ளலாம். கட்டுமானத் தொழிலில் இந்தஅரசாணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது பற்றியகூடுதல் விவரங்கள்மற்றும்ஆலோசனைகளுக்கு http://faceatp.com (Federation of all Civil Engineers Association of Tamil Nadu & Puducherry) என்றஇணைய தளத்தை அணுகலாம்.

Next Story