வெப்பத் தடுப்பு ஓடுகள்


வெப்பத் தடுப்பு ஓடுகள்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:33 PM IST (Updated: 8 Jun 2019 12:33 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடங்களின் மேல்மாடிகளில் பதிக்கப்படும் வெப்பத் தடுப்பு ஓடுகளில், ‘செராமிக்’ ரகமானது எடை குறைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

ட்டிடங்களின் மேல்மாடிகளில் பதிக்கப்படும் வெப்பத் தடுப்பு ஓடுகளில், ‘செராமிக்’ ரகமானது எடை குறைந்ததாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, இதர வெப்பத் தடுப்பு ஓடுகள் மற்றும் ‘வெதரிங் கேர்ஸ்’ தட்டு ஓடுகளை ஒரு சதுரடி பரப்பளவில் பதிக்கும்போது, அப்பகுதி மேல்தளத்தின் எடை சுமார் 25 முதல் 30 கிலோ எடை அதிகமாகிறது. அந்த வகையில், தோராயமாக 1000 சதுரடி அளவுள்ள மேல்மாடியில் அந்த ஓடுகளை பதிக்கும் பொழுது, சுமாராக கட்டிடத்தின் எடை 25 முதல் 30 டன்னாக இருக்கலாம். செராமிக் வகை ஓடுகள் பதிக்கப்படும்போது, ஒரு சதுரடிக்கு சுமார் 12 முதல் 15 கிலோ எடை மட்டுமே அதிகரிக்கும் என்ற நிலையில் சுமார் 1000 சதுரடி பரப்பில் இவ்வகை ஓடுகளை பதிக்கும்போது, கட்டிடத்தின் எடை கிட்டத்தட்ட 12 முதல் 15 டன் எடை கொண்டதாக இருக்கலாம். இந்த எடைக்குறைவு, கட்டிடத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவு கிறது.

Next Story